பெண்களின் உயிரைச் சூறையாடிய கரடிகள்! (வீடியோ இணைப்பு)
ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் காசூனோ நகரில் தனியார்
நிர்வாகத்தின் கீழ் மிருககாட்சி சாலை உள்ளது. இங்கு 30-க்கு மேற்பட்ட கரடிகள்
வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த கரடிகளுக்கு உணவு வழங்குவதற்காக 60 மற்றும் 70 வயதுடைய 2 பெண் ஊழியர்கள்
சென்றனர். அப்போது 6 கரடிகள் திடீரென்று வேலியை தாண்டி குதித்து 2 பெண்களையும்
கடித்து குதறிவிட்டு தப்பி ஓடிவிட்டன. இதில் 2 பெண்களும் அதே இடத்தில்
இறந்தனர்.சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மற்ற ஊழியர்கள் 2 பெண்களும் இறந்து
கிடப்பதைக் கண்டு பொலிஸிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பின்பு பொலிசாரும்,
வேட்டையாடுபவர்களும் விரைந்து வந்து தப்பி ஓடிய கரடிகளை பிடிக்க முயன்றனர்.
மேலும் அது பயன் அளிக்காமல் போகவே 6 கரடிகளையும் சுட்டுக் கொன்று விட்டனர். இந்த
சம்பவத்திற்கு மிருககாட்சி சாலை நிர்வாகத்தின் பாதுகாப்பு குளறுபடி காரணமா? என்பது
குறித்து விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக