சனி, 14 ஜூலை, 2012

கனடா மார்க்கம் பகுதியில் தமிழரின் வீடு தீக்கிரை!



on 14 July 2012.
வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 04h30 மணியளவில் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருவரின் வீட்டில் ஏற்பட்ட தீப்பிழம்பு காரணமாக 3பேர் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் வீடும் கடும் சேதத்துக்கு...


உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் வெளியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த மூன்று வாகனங்கள் முற்றாக தீக்கிரையாகி இருக்கின்றது. ஸ்டீல் அவெனியூ- மார்க்கம் சாலையின் அண்மையில் ஈஸ்ட்வல் ட்ரைவ்வில் அமைந்துள்ள தமிழருக்குச் சொந்தமான வீடே தீக்கிரைக்கானது.


இதில் குழந்தைகள் உட்பட 12 பேர் இருந்தார்கள். இவர்களில் 6 பேர் விருத்தினராக தங்கியிருந்தார்கள் எனவும் வீட்டின் கீழ் தளத்தில் இருந்த மூவருக்குமே காயம் ஏற்பட்டதாகவும், இவர்களை வீட்டின் உரிமையாளரினால் வெளியே கொண்டுவரப்பட்ட பின் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


இவர்களில் ஒருவர் தீக் காயங்களுடன் டொரண்டோ மருத்துவமனையிலும், மற்றைய இருவரும் புகையினை உட்சுவாசித்தமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மார்க்கம் ஸ்ரோஃப்வில் மருத்துவமனையிலும் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார்கள்.



தீயணைப்புப் படையினர் 30 நிமிடம் தாமதமாக வந்தனர் எனவும் இதனால் தான் பாரிய சேதங்கள் ஏற்பட்டதாகவும், மீட்புப்படையினர் வராமல் வீட்டினுள் இருந்தவர்கள் வெளியே வரவில்லை எனவும் அயலவர்கள் கருத்துத் தெரிவித்தனர். கார் நிறுத்தத்தில் ஏற்ப்பட்ட தீ வெடிப்பே இதற்கு காரணமாக இருக்கலாம் என ஊகிக்கப்பட்டாலும் தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.


வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் $ 900,000 ஆக இருக்கும் என மதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி மார்க்கம் 7 ஆம் வட்டாரத்துக்குச் சேர்ந்த பகுதியாக இருப்பதனால் நகரசபைத் தலைவர் திரு லோகன் கணபதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்கள் தெரிவித்துள்ளார்.

News : Source

/eutamilar. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக